Importance of Breast milk

Importance of Breastmilk

பாட்டிலில் பால் கொடுப்பதாக இருந்தால் , என்னென்ன முன் எச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் ? பாட்டிலில் பால் கொடுப்பதாக இருந்தால் , வாயகன்ற பாட்டிலைத்தான் உபயோகப்படுத்துதல் வேண்டும் . குறுகலான வாய் உள்ள பாட்டிலைக் கழுவுவது சிரமம் . குழந்தைக்குப் பால் கொடுக்கும் முன் பாட்டிலைப் பிரஷ்ஷினால் நன்கு கழுவி விட்டு , ஒரு பாத்திரத்தில் பாட்டிலையும் ரப்பரையும் போட்டு தண்ணீர் ஊற்றி தண்ணீரைக் கொதிக்க வைத்தல் வேண்டும் .

பாட்டிலும் ரப்பரும் ஒரு சில நிமிடங்கள் கொதித்த பின்னர் , பாட்டிலை எடுத்து அதில் பாலூற்றிக் கொடுத்தலே முறையாகும் . மேலும் , தாய்மார்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொண்டுதான் , பாலினைத் தயார் செய்தல் வேண்டும் . பாலினைத் தயார் செய்யும் பாத்திரங்களும் மிகவும் சுத்தமாக இருத்தல் அவசியம்.

Importance of the breastmilk?

  1. Lower risk of breast cancer.
  2. Lower risk of rheumatoid arthritis and lupus.
  3. Less endometriosis.
  4. Less endometriosis.
  5. Less osteoporosis with age
  6. Less diabetes.
  7. Less cardiovascular disease.
  8. Superior nutrition.
  9. Breast milk is sterile.

Best of raise children healthy

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் எத்தனை மாதங்கள் கொடுக்கலாம் ?Best Family Board Games in India

குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை இரண்டு வருடங்கள் வரை கொடுக்கலாம் . ஆனால் , நான்கிலிருந்து ஐந்து மாதத்திலிருந்தே மாற்று உணவினைக் கொடுத்து தாய்ப்பாலைச் சிறிது சிறிதாக மறக்கப் பழக்குதல் வேண்டும் . முதல் மூன்று நான்கு மாதங்கள் வரை தாய்ப்பால்தான் அத்யாவசிய உணவாகும் .

  மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை சார்ந்த புற்றுநோய் வராமலும் தடுக்கும் பெரும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. மேலும், தாய்ப்பால் தருவதன் மூலம் உடலில் கலோரிகள் எரிக்கப்படுவதால், தாயின் உடல் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பிவிடும். பிறந்த குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால்தான்.

நீங்கள் நல்ல அப்பாவா?

அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் அறிவு. குழந்தைக்கு அன்பையும் அறிவையும் தருவது பெற்றோர் மட்டுமல்ல. சுற்றுச்சூழலும்தான். எல்லா அம்மாக்களும் குழந்தைகள் மீது அன்பைப் பொழிவதும் இல்லை. எல்லா அப்பாக்களும் குழந்தைக்கு நல்லறிவைத் தருவதும் இல்லை .தாயுமாகி குழந்தையை கவனிக்கும் தந்தையும் உண்டு. தந்தையுமாகி குழந்தையைக் கவனிக்கும் தாயும் உண்டு. இருவரில் ஒருவரது அன்பு அல்லது அரவணைப்பு குறைந்தாலும் மனோரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் ஏராளம்.இன்றைய அவசரமான உலகில் குழந்தைக்கு நல்ல அப்பாவாக நீங்கள் இருக்கிறீர்களா? நல்ல அப்பாவுக்கு அளவுகோல் என்ன? இங்கே 10 வழிகள் தரப்பட்டுள்ளன. இவற்றைக் கடைப்பிடித்தால் நீங்கள் ஒரு நல்ல அப்பாவாக மட்டுமின்றி நல்ல குடும்பத் தலைவனாகவும் இருக்க முடியும்.

1. உங்கள் குழந்தையின் தாயை மதியுங்கள் ஒரு நல்ல அப்பாவுக்கு மிக முக்கியமான தகுதி என்ன தெரியுமா? அவர் தனது மனைவியை மதிக்க வேண்டும். உங்கள் திருமண உறவை வலுவாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை நங்கள் விவாகரத்து ஆனவராக இருந்தாலும், உங்கள் குழந்தையின் தாய்க்கு உரிய மரியாதை தர வேண்டும்.கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு தெரியும்படி நடந்துகொள்ளடும். குழந்தைகள் தங்களுக்கு பாதுகாப்பான சூழல் இருப்பதாக கருதும்படி செய்ய வேண்டும்.தங்களுடைய தாயும் தந்தையும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதையைப் பார்க்கும் குழந்தைகள், இருவரையும் மனதார ஏற்று அவர்களை மதிக்க கற்றுக் கொள்வார்கள்.

2. குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள் "உங்களுடன் கொஞ்ச நேரமாவது செலவழிக்க வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி" என்று குழந்தைகளிடம் சொல்லுங்கள். அதைவிட்டு, எப்போதும் பிஸியாக இருப்பதுபோல அலைந்து கொண்டிருந்தால், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உங்கள் குழந்தைகள் நினைத்து விடக்கூடும். நீங்கள் என்னதான் காரணம் சொன்னாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள். குழந்தைகள் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆன குழந்தைகளுடன் நீங்கள் நேரம் செலவழிப்பது மிக அவசியம். குழந்தைகள் வேகமாக வளரக்கூடியவ அவர்கள் இழக்கும் சந்தோஷங்களை எப்போதும் தன் பெற முடியாது என்பதை உணருங்கள்

3. குழந்தைகளின் பிரச்சனைகளை கேளுங்கள் "எங்க அப்பா ஏதோ சொல்லனும்னார் " "அப்பா வரட்டும் பேசிக்கலாம்" என்று குழந்தைகளிடம் அம்மா கூறுவதைக் கேட்டிருக்கிறோம். சிறுவயதில் தவறுகள் செய்வது குழந்தைகளின் இயல்பு. நீங்களும் உங்கள் சிறு வயதில் தவறுகள் செய்தவர்தான். எனவே, உங்கள் குழந்தைகள் தவறு செய்யும்போது, அவர்களுக்கு எளிதில் புரியும்படி பிரச்சனைகளை விளக்குங்கள். தங்கள் செயலுக்கு அவர்கள் சொல்லும் நியாயங்களைக் கேளுங்கள். அவர்களை நேர்ப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு குழப்பிவிடாதீர்கள்.

4. அன்பு கலந்த ஒழுங்கு அவசியம் அதை எல்லா குழந்தைகளுக்கும் ஒழுங்கு கட்டுப்பாடு அவசியம்தான். தங்களை வழிநடத்த வேண்டும் என்று குழந்தைகள் விரும்புவார்கள். குழந்தைகளிடம் அன்பு செலுத்தும் அதேசமயத்தில், அதற்கு ஒரு வரம்பு வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் ஒவ்வொரு காரியத்திற்கும் பின் விளைவுகளை விளக்குங்கள். அவர்களுடைய விரும்பத்தக்க நடத்தைகளை அர்த்தத்துடன் பாராட்டுங்கள். குழந்தைகளிடம் கட்டுப்பாட்டுடனும், அமைதியான விதத்திலும் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

5. முன்மாதிரியாக இருங்கள் அப்பாக்களுக்கு தெரியுமோ தெரியாதோ, குழந்தைகளுக்கு அவர்கள் தான் முன்மாதிரியாக இருக்கிறார்கள். தந்தையின் பாதிப்பு இல்லாத குழந்தைகள் மிகவும் அரிது. அப்பாவுடன் நிறைய நேரத்தை செலவிடும் பெண்குழந்தை வளரும்போது, பையன்களால் மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். தந்தையின் குணாம்சத்தை கணவரிடமும் எதிர்பார்க்கிறாள். வாழ்க்கையில் எது முக்கியம் என்பதை மகனுக்கு தந்தை புரியவைக்க வேண்டும். நேர்மையையும் பொறுப்புணர்வையும் கற்றுத்தர வேண்டும். உலகம் முழுவதும் நாடக மேடை அதில் ஒரு அப்பாவுக்கு முக்கிய பாத்திரம் இருக்கிறது. அந்தப் பாத்திரத்தை அவர் செம்மையாக செய்ய வேண்டும்.

6. ஆசிரியராய் இருங்கள் கற்றுக் கொடுப்பது அடுத்தவருடைய வேலை என்று அப்பாக்களில் பலர் நினைக்கிறார்கள். ஆனால், நல்லதையும் கெட்டதையும் பற்றி தனது குழந்தைகளுக்கு கற்றுத்தரும் அப்பா, தனது குழந்தைகள் மிகச் சிறந்த காரியங்களை செய்ய ஊக்குவிக்கும் அப்பா, தனது குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார். அன்றாட நிகழ்வுகளை உதாரணமாக்கி தனது குழந்தைக்கு வாழ்க்கையின் அடிப்படையை புரியவைக்க ஒரு அப்பாவால் முடியும்.

7. குடும்பத்துடன் சாப்பிடுங்கள் மூன்று வேளைகளில் ஏதேனும் ஒரு வேளை குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுங்கள். இது ஆரோக்கியமான குடும்ப உறவுக்கு முக்கியமானது. பரபரப்பான வாழ்க்கையில் இந்த குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும். தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம். என்ன செய்யப்போகிறோம். என்பதை உங்களிடம் கூறுவார்கள். அவர்கள் கூறுவதைக் கேட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அப்பாக்களுக்கு நேரம் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக குடும்பத்தினர் அனைவரும் ஒருசேர அமர்ந்து சாப்பிடுவதில் கிடைக்கிற சந்தோஷம் ரொம்பவும் முக்கியம்.

8. குழந்தைகளுக்கு படித்துக் காட்டுங்கள் இன்றைய உலகில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இணைய தளங்களும் குழந்தைகளின் வாழ்க்கையை ஆக்கிரமித்து விட்டன. இத்தகைய சூழலில் அவர்களுக்காக படித்துக் காட்டுவதற்கு அப்பாக்கள் முயற்சி செய்ய வேண்டும். காரியங்களில் ஈடுபடும்போதும், படிக்கும்போதும், பார்க்கும் போதும், கேட்கும்போதும் குழந்தைகள் நிறைய கற்றுக் கொள்கிறார்கள். சிறு குழந்தையாக இருக்கும்போதே அவர்களுக்கு படித்துக்காட்டி படிக்கும் பழக்கத்திற்கு தயார்படுத்துங்கள். அவர்கள் பெரியவர்களாகும்போது, தாங்களாகவே படிப்பதற்கு ஊக்குவியுங்கள். படிப்பின் மீது காதல் கொள்ளும் வகையில் உங்கள் பிள்ளையை தயார்படுத்தி விட்டால், அவர்களுடைய வாழ்க்கை வளமாகிவிடும். தனிப் பட்ட வாழ்க்கை முன்னேற்றத்திற்கும், தொழில்ரீதியான முன்னேற்றத்திற்கும் படிப்ப மிகச் சிறந்த துணையாகும்.

9. பிரியத்தோடு இருங்கள் தாங்கள் விரும்பப்படுகிறோம். தங்கள் குடும்பத்தினரால் அன்பு செலுத்தப்படுகிறோம். அவர்களால் அங்கீகரிக்கப்படுகிறோம் என்பது தெரியும்போதுதான் குழந்தைகள் பாதுகாப்பாக உணர்கின்றன. குழந்தைகளிடம் பேசுவதையும் அவர்களை அணைத்து முத்தமிடுவதையும் அப்பாக்கள் விரும்பவேண்டும். தினந்தோறும் குழந்தைகளை அணைத்து கொஞ்சிப் பாருங்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளை விரும்புகிறீர்கள் என்பதை தெரியப்படுத்திப் பாருங்கள். குழந்தைகளிடம் மிகப்பெரிய மாறுதலை காண்பீர்கள்.

10. அப்பாவுக்கு நிகர் அப்பாதான் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானாலும் அப்பாவின் தங்கள் ஆலோசனைக்கும், அறிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிலையில்தான் இருப்பார்கள். பள்ளிப் படிப்பை தொடர்வதாகட்டும், புதிய வேலையில் சேருவதாகட்டும், திருமணமாகட்டும் குழந்தைகள் வளர்ந்து திருமணம் செய்து, தங்களுடைய சொந்த குடும்பத்தை உருவாக்கும் வரையில் அப்பாவின் பங்கு மிகவும் அவசியமானது. எனவே, நீங்கள் நல்ல அப்பாவாக மாறுங்கள்.

கண்கோளாறுகள்Best Family Board Games in India

கண் கோளாறுகள் இந்தக் காலத்தில் ஏழெட்டு வயதுக் குழந்தைகள் கூட மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டு சுற்றுவதைக் காணலாம் . இவ்வளவு சின்ன வயதிலேயே அவர்கள் கண்பார்வை கோளாறு அடைவதற்கு வைட்டமின் ஏ சத்து உணவில் குறைவாக இருப்பதே காரணமாகும் . வைட்டமின் ஏ ' சத்து குறைவாகப் பெற்ற குழந்தைகளின் உடல் சருமம் மென்மையாக இல்லாமல் சொர சொரப்பாக இருக்கும் . தோல்களில் சுருக்கம் காணப்படுவதும் உண்டு . இந்தக் குறைபாடுகளை அகற்றுவதற்கு பச்சைக் காய்கறிகள் , கீரை வகைகள் , ஈரல் ,பால் , போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் . மீன் எண்ணெய் காலையிலும் மாலையிலும் கொடுத்து வருவது மிகவும் நல்லது.

சரும பிரச்சனைகள்

அக்கி குழந்தைகளின் உடல் சருமத்தில் படை போலத் தொடங்கி பின்னர் சிறுசிறு கொப்புளங்களாக மாறி பெருந் தொல்லை தரும் சரும நோய் இது . சில சமயம் இந்த சருமநோய் உடல் முழுவதும் பரவி குழந்தையை நிலை குலையச் செய்து விடும். செய்ய வேண்டிய சில வழிமுறைகள்:

1. பப்பாளிப் பழத்திலிருந்து சாறு எடுத்து பசுவின் பாலோடு கலந்து உடலில் அக்கி தோன்றியுள்ள களில் எல்லாம் நன்றாகத் தடவிவிட வேண்டும்.

2. அக்கி வந்திருக்கும் குழந்தைக்கு எப்போதும் சுத்த மான உடையே உடுத்த வேண்டும் . உடைகளை அழுத்த அணிவிக்கக் கூடாது . குழந்தையை நல்ல காற்றோட்டமான இடத்தில் உலாவவிட வேண்டும்.

3. வெண் தாமரைப் பூ கஷாயத்தையும் தொடர்ந்து கொடுக்கலாம்.

4. தயிரைத் வெள்ளைத் துணியிலிட்டு பிழிந்து நீரை அகற்றி விட்டு நல்ல திருநீறை அதனுடன் கலத்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் தாராளமாகப் பூசி வந்தாலும் அக்கி விரைவில் மறைந்து விடும்.

  

நீங்கள் நல்ல அம்மாவாக இருக்க வழிகள்Best Family Board Games in India

1. குழந்தை தங்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான பெற்றோர், அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிடுகின்றனர். இது, குழந்தையின் வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிட வழி ஏற்படுத்திவிடும். எனவே, குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்:

2. குழந்தைகளுடன் மனக்கசப்பு ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து குழந்தையின் தலையைக் கோதியபடி, இரவு நேரங்களில் படுக்கையில் இருக்கும்போது மெதுவாக அறிவுரை கூறுங்கள், இது உறவை வலுப்படுத்த உதவும்.

3. தனது அம்மாவுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும் என்று குழந்தைகள் நினைப்பார்கள். பணிக்குச் செல்லும் தாய்மார்கள், தனது பணியிடத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை குழந்தைகளிடம் எடுத்துக் கூறலாம். தன்னார்வலராக இருந்தால், மற்றவர்களுக்கு எவ்வாறு உதவ செய்ய முடியும் என்று விவரிக்கலாம். இது குழந்தைகளிடம் அம்மாவின் மதிப்பை உயர்த்தும்.

4. சந்திக்கும் நபர்கள் அனைவரிடமும் உதவி கேட்பவரா நீங்கள். இந்தப் பழக்கம் உங்களுக்கே மன உளைச்சலை ஏற்படுத்தும். மற்றவர்கள் தவறாக நினைப்பார்களோ என்ற எண்ணம் உங்களை வாட்டிக் கொண்டே இருக்கும். முதலில் அந்த பழக்கத்தை நிறுத்துங்கள். இப்போது உங்கள் மனநிலை சீராகும். அன்றாடப் பணிகளில் கூடுதல் ஈடுபாடு காட்ட வழி ஏற்படும்.

5. மாலை நேரங்களில் நண்பர்களுடன் ரிலாக்ஸாக வெளியில் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

6. அன்றாடப் பணிகளில் உங்களுக்கு என்று தனித்துவமிக்க முறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதன்படியே செயல்படுங்கள். எனது முன்னோர். இப்படித்தான் இருந்தார்கள் நானும் அப்படித்தான் இருப்பேன் என்று செயல்படுவதை தவிருங்கள்.

7. குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு உள்ள கிரகிக்கும் திறனைக் கொண்டு கற்றுக் கொள்கின்றனர். அவர்களை இப்படித்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள். அவர்களின் நிலையை அறிந்து, அதனை மேம்படுத்த ஆலோசனைகளை மட்டும் வழங்குங்கள்.

8. தோல்விதான் பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. குழந்தைகளின் எல்லா முயற்சிகளையும் ஆதரியுங்கள் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தால் பதறாதீர்கள். மிதிவண்டி தொடக்கூடாது என்று கண்டிக்காதீர்கள். முயற்சி போதாது என்பதை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுங்கள். குழந்தைகள் அடுத்தடுத்து வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

9. குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதை முடிந்தவரை தவிருங்கள். பெற்றோருடன் இணைந்து விளையாடும் குழந்தைகள், தனியாக விளையாட விருப்பமின்றி ஓவ்வொரு முறையும் பெற்றோரையே எதிர்பார்க்கும் ! நிலை ஏற்படும் எனவே பெரிய அளவிலான விளையாடுகளைத் தவிர்த்து மற்ற விளையாட்டுக்களில் குழந்தைகளை தனியாக விளையாட அமைதிப்பது அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

10. உங்களுக்கு கிடைத்த வேலை சரியாக இல்லை. வாழ்க்கை சீராக அமையவில்லை. இப்படியாக புலம்பாதீர்கள். கிடைத்த வேலையை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியும் என்று பாருங்கள். இது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

11. குழந்தைகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிவிடக் கூடாது. அப்போதுதான், ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்வது எப்படி என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும். நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடாது என்பதை அவர்கள் உணர்வதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள. குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது பயனுள்ளதாக அமையும்.

குழந்தைகளின் செயல்பாடுகளில் முன்னேற்றம்

ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது என்று குழந்தைகள் சொல்லும்போது, அதனை பொறுமையாகவும், கவனமாகவும் கேளுங்கள். இது குழந்தைகளின் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும். அவர்கள் சொல்ல வரும் விஷயத்தை கேட்கத் தவறினால், அல்லது மட்டம் தட்டி மறுதலித்தால் அவர்களுக்கு வருத்தம் ஏற்படும். முன்னேற்றத்துக்கு தடையாக அமையும். குழந்தைகள் தங்களுடைய வேதனைகள் அனைத்தையும் பெற்றோரிடம் வெளிப்படையாக பேச மாட்டார்கள். அப்படிப்பட்ட நேரத்தில், குழந்தைகளிடம் உள்ள சோகத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அவர்களைக் கட்டாயப்படுத்தாமல் பொறுமையாக பேசி வேதனைக்கனா காரணங்களை உணர்ந்து அதைப் போக்க உதவ வேண்டும். குழந்தைகளைச் சுற்றிலும் அதிக அளவில் உறவினர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கும். குழந்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும் நீங்கள் தீர்மானிக்காதீர்கள். அவர்களுடைய திறமையையும் விருப்பத்தையும் அறிந்து அதில் முன்னேற்றத்தை ஏற்படுத்த ஏற்படுத்த முயற்சியுங்கள்.

குழந்தைகளை வளர்க்கும் விதம்

காலையில் மென்மையான பாடல்களைக் கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும், குழந்தைகளுக்கும் பதட்டம் இல்லாத மனநிலையை ஏற்படுத்தும். குழந்தைகளை வளர்க்கும் விதம் பற்றி மற்றவர்கள் குறைகூறக்கூடும். அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். அவர்களுடைய கூற்று தவறாக இருந்தால் அதை ஏற்காதீர்கள். அதேசமயம், அவர்கள்மீது, கோபப்படாமல் மென்மையாக பதில் அளியுங்கள். இன்று நான் நிறைய தவறுகளை செய்துவிட்டேன் என்று குழந்தைகள் கூறக்கூடும். அப்படிப்பட்ட சமயத்தில், நானும் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன் என்று கூறுங்கள். உங்கள் தவறுகளை எப்படி திருத்தினீர்கள் என்று விளக்குங்கள். அவர்களுடைய தவறுகளையும் திருத்திக் கொள்ள அறிவுரை வழங்குகள்.பெரிய மனிதர்களும் தவறு செய்கிறார்கள் என்பதை உணர்ந்து, தம்மிடம் உள்ள வேதனைகளை மறந்துவிடுவார்கள். குழந்தையிடம் கோவமாக பேசினால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்.கோவப்படக்கூடாது என்பதை குழந்தைகள் உணரும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள். சில விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று, அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுங்கள். உங்களுக்கும், குழந்தைக்கும் உள்ள உறவை இது வலுப்படுத்தும். தினந்தோறும் காலையில் எழுந்தவுடன், குறைந்தது 5 பேருக்கு அல்லது 5 செயல்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். இந்த முயற்சி, குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும்.



share social media's