Importance of BreastMilk




பாட்டிலில் பால் கொடுப்பதாக இருந்தால் , என்னென்ன முன் எச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் ? பாட்டிலில் பால் கொடுப்பதாக இருந்தால் , வாயகன்ற பாட்டிலைத்தான் உபயோகப்படுத்துதல் வேண்டும் . குறுகலான வாய் உள்ள பாட்டிலைக் கழுவுவது சிரமம் . குழந்தைக்குப் பால் கொடுக்கும் முன் பாட்டிலைப் பிரஷ்ஷினால் நன்கு கழுவி விட்டு , ஒரு பாத்திரத்தில் பாட்டிலையும் ரப்பரையும் போட்டு தண்ணீர் ஊற்றி தண்ணீரைக் கொதிக்க வைத்தல் வேண்டும் .



குழந்தைகளுக்குத் தாய்ப்பால் எத்தனை மாதங்கள் கொடுக்கலாம் ?




குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை இரண்டு வருடங்கள் வரை கொடுக்கலாம் . ஆனால் , நான்கிலிருந்து ஐந்து மாதத்திலிருந்தே மாற்று உணவினைக் கொடுத்து தாய்ப்பாலைச் சிறிது சிறிதாக மறக்கப் பழக்குதல் வேண்டும் . முதல் மூன்று நான்கு மாதங்கள் வரை தாய்ப்பால்தான் அத்யாவசிய உணவாகும் .



நீங்கள் நல்ல அப்பாவா ?




அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் அறிவு. குழந்தைக்கு அன்பையும் அறிவையும் தருவது பெற்றோர் மட்டுமல்ல. சுற்றுச்சூழலும்தான். எல்லா அம்மாக்களும் குழந்தைகள் மீது அன்பைப் பொழிவதும் இல்லை. எல்லா அப்பாக்களும் குழந்தைக்கு நல்லறிவைத் தருவதும் இல்லை .தாயுமாகி குழந்தையை கவனிக்கும் தந்தையும் உண்டு. தந்தையுமாகி குழந்தையைக் கவனிக்கும் தாயும் உண்டு. இருவரில் ஒருவரது அன்பு அல்லது அரவணைப்பு குறைந்தாலும் மனோரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் ஏராளம்.இன்றைய அவசரமான உலகில் குழந்தைக்கு நல்ல அப்பாவாக நீங்கள் இருக்கிறீர்களா?



நீங்கள் நல்ல அம்மாவாக இருக்க வழிகள்




குழந்தை தங்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான பெற்றோர், அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிடுகின்றனர். இது, குழந்தையின் வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிட வழி ஏற்படுத்திவிடும். எனவே, குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.



குழந்தைகளை வளர்க்கும் விதம்




காலையில் மென்மையான பாடல்களைக் கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும், குழந்தைகளுக்கும் பதட்டம் இல்லாத மனநிலையை ஏற்படுத்தும். குழந்தைகளை வளர்க்கும் விதம் பற்றி மற்றவர்கள் குறைகூறக்கூடும். அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். அவர்களுடைய கூற்று தவறாக இருந்தால் அதை ஏற்காதீர்கள். அதேசமயம், அவர்கள்மீது, கோபப்படாமல் மென்மையாக பதில் அளியுங்கள்.